பாம்போர் என்கவுண்டர் 3-வது நாளை எட்டியது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, துப்பாக்கி சண்டை தொடர்கிறது

ஸ்ரீநகர்,

பாம்போரின் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையானது 3-வது நாளை எட்டியது. இதுவரையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பாம்போர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக கட்டிடம் உள்ளது.  இந்த கட்டிடத்திற்குள் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் புகுந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ், பாதுகாப்பு படையின் கவனத்தை கவர்வதற்காக அவர்கள் அங்குள்ள விடுதியின் மெத்தைகளை தீயிட்டு கொளுத்தினர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். 

பயங்கரவாதிகளை அழிக்க பாதுகாப்பு படையினர் சிறிய மோட்டார் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அங்கு 2–வது நாளாக துப்பாக்கி சண்டை நீடித்தது. ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இன்னும் அந்த கட்டிடத்துக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இருள் காரணமாக சண்டை நேற்றிரவு நிறுத்தப்பட்டாலும், இன்று (புதன்கிழமை) 3–வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

இன்னும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இருதரப்பு சண்டையானது தொடர்ந்து நீடித்து வருகிறது, பாதுகாப்பு படையினர் கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் நுழைந்துவிட்டனர், அவர்கள் ஒவ்வொரு அடியையும் பத்திரமாக எடுத்து வைத்து எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 52 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் அரசு கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்து உள்ளது. கட்டிடம் எழும்பு கூடாக காட்சி அளிக்கிறது. கட்டிடம் தீ பிடித்து எரிந்தும், சுவர்கள் சரிந்தும் புகைமூட்டமாக காணப்படுகிறது.



கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதமும் இக்கட்டிடம் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானது. இத்தாக்குதலில் இரு ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 48 மணி நேரம் நீடித்த சண்டையில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...