சாதியைப் பற்றி இழிவுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: பொள்ளாச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனை சகமாணவர்களின் மத்தியில் சாதியைப் பற்றி இழிவுபடுத்தி பாகுபாடு செய்து தாக்குதல் நடத்திய பள்ளியின் ஆசிரியர் ஓவிய மற்றும்  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;

பொள்ளாச்சியில் உள்ள A.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். பள்ளிக்கு சென்ற மாணவன் ஆனந்தை பள்ளி ஆசிரியர் ஓவிய, மற்றும் தலைமை ஆசிரியர் சகமானவர்கள் மத்தியில் அம்மாணவனை தாழ்த்தப்பட்ட சாதி என்று இழிவுபடுத்தியும் படிப்பதற்கு தகுதி இல்லையென்றும் கூறியும், மாணவனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கேட்டபோது, படிக்க வைப்பதற்கு விருப்பம் இருந்தால் இங்கு படிக்க வையுங்கள் இல்லை என்றால் டி.சி வாங்கிக்கொண்டு செல்லுமாறும் கூறினர். பெற்றோரிடம் மறைமுகமாக சாதியை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது அவமானமாக இருந்ததாகவும், பின்னர் ஆனந்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதித்து. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், ஆனந்த் மற்றும் பெற்றோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மாணவன் அப்பள்ளியில் படிப்பை மேற்கொள்ள நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...