காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்  முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு கடும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளும் முழு அடைப்பு மற்றும் வன்முறையை தூண்டி விட்டதால் பாதுகாப்பு படையினர் இடையே போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அங்கு தற்போது நிலமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை இன்னும் நீடிக்கிறது.  

பதட்டமான பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிப்பெய்டு மொபைல் போன்களில் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு இருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இருப்பினும், செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், 99 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியே உள்ளது.  காஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதி 14 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...