'எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்!

கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் 50 பேர் பங்கேற்பு.

கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் அமைப்பு சார்பில் கலை கலாச்சாரம் வணிக தொடர்புகள் தொடர்பான எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர்.



இது குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருவதாகவும் 51 நாடுகளில் 12000 உறுப்பினர்களுடன் இயங்கி வருவதாகவும் கோவையில் இது துவங்கபட்டு 6வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதாக கூறினர். ஆஸ்திரேலியாவிலிருந்து 50 பேரும் இந்தியாவிலிருந்து 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தி, வார்பட தொழில், உதிரி பாகங்கள் உற்பத்தி, உள்ளிட்டோரிடம் தொழில் அனுபவங்களை அறிந்து கொண்டதாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

மேலும் வரும் காலங்களில் இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வணிகம் துவங்குவது குறித்த அனுபவங்களை பெற்றதாக கூறினர். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கருத்தரங்கி தொழில் மூலம் வளர்ச்சி கண்ட பத்மஸ்ரீ முருகானந்தம், சுகுணா நிறுவனர் சொளந்தராஜன், தைரோ கேர் டாக்டர். வேலுமணி இன்போசிஸ் நிறுவனர் ஷிபுலால் தங்களது வெற்றி பெற்று வந்த பாதை குறித்து பகிர்ந்து கொண்டது தங்களுக்கு மிகவும் பயணுள்ளதாக அமைந்த்தாக ஆஸ்திரேலியா தொழில் முனைவோர் தெரிவித்தனர்.

நேற்று உதகை சென்றவர்கள் அங்குள்ள படுகர் இன மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்ததாக தெரிவித்தவர்கள் கோவையில் ஜோதிடம், கேளிக்கை நிகழ்வு உள்ளூர் உணவு, சமையல் கலைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். மேலும் கோவை எண்டர்பிரானர்ஸ் ஆர்கனைசேசன் உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு அஸ்திரேலியாவிற்கு வர அழைக்கபட்டுள்ளதாகவும் அங்கு உள்ள தொழில் வாய்புகள் குறித்து நம் நாட்வர் தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு என ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கர் டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி ஜெயந்தரா ஜெயசந்திரன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் இனை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் துரைசாமி, எஸ்.ஜே.பி மோட்டர் நிர்வாக இயக்குனர் சிவபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...