'நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்'- விருது வழங்கும் விழாவில் இயக்குனர் சமுத்திரக்கனி பேச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில்  மணிவண்ணன் விருது வழங்கும் விழா நடை பெற்றது. நாய் வால் என்ற திரைப்பட அமைப்பு ஒருங்கிணைத்த இவ்விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். சிறந்த திரைப்படத்திற்கான மணிவண்ணன் விருது 'அப்பா' திரைப் படத்திற்கு வழங்கப்பட்டது. இதை அப்படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி பெற்றுக்கொண்டார். தொடர்ம்து சிறந்த நாவலுக்கான விருது 'பார்த்தீனியம்' என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இதை அப்புத்தகத்தின் எழுத்தாளர் தமிழ் நதி பெற்றுக்கொண்டார். 



தொடர்ந்து, பார்த்தீனியம் நாவலின் எழுத்தாளர் தமிழ் நதி பேசியதாவது :- 

எனது நாவலை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த நாவலை 14 மாதங்கள் எழுதினேன். திருத்துவதற்கு 8 மாதங்கள் ஆனது. பலர் இந்த நாவலை குறித்து பலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் நான் நாய் வால் போன்றவள். எழுத்து தான் என் வாழ்வின் ஆதாரம் அதை விட்டு நான் எங்கும் செல்லமாட்டேன்.

 இவ்வாறு அவர்  பேசினார்.  



இதைத் தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி பேசுகையில்:-

'நான் அப்பா திரைப்படத்திற்கு வாங்கும் முதல் விருது இது. மணிவண்ணன் ஒரு அருமையான மனிதர். அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட நான் இன்று அவர் பெயரிலே விருது வாங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நண்பர்கள் அதிகம். அது தான் என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது.   என்ன பிரச்சனை வந்தாலும், நான் இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு தைரியம் கொடுங்கள். குழந்தைகள் தைரியசாலியாக உருவெடுப்பார்கள்.  

நான் கடந்து வந்த பாதையை சார்ந்து தான் என் படங்களும் இருக்கும்.  என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் தான் அப்பா படத்தை உருவாக்கினேன்.  நம் சமூகத்தில் சாதி ஊறிப்போய்விட்டது. ஒருவரிடம் நான் நாம் 5 நிமிடம் பேசினால் , நம் சாதியை கேட்கத்தான்  வருகிறார்கள். இது மாற வேண்டும்.' என்றார். 



இவ்விழாவில் எழுத்தாளர் பாமரன், நடிகர் நமோ நாராயணன்,  மற்றும் 100க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்..



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...