இந்து பிரமுகர் கொலையால் பதற்றம்

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மர்ம நபர்களால் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பெங்களூருவின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆர். ருத்ரேஷ் என்பவர், சிவாஜிநகர் சகா பகுதியின் ஆர்எஸ்எஸ் மண்டல தலைவராகவும், ஷிவாஜி நகர் பா.ஜ., செயலாளராகவும் உள்ளார். நேற்று இரவு, அவரது வீடருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர்,, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்து அமைக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிநகரில் இந்து அமைப்பினர் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவில் பா.ஜ., பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி பிரச்னை தொடர்பான பதற்றம் தணிந்து வருவதால் பெங்களூருவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையால் மீண்டும் பதற்ற நிலை உருவாகி உள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...