இரண்டாவது நாளாக ரயில் மறியல்: 17 ஆயிரம் பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, விவசாயிகள், தி.மு.க., - காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நேற்று இரண்டாவது நாளாக, ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை எழும்பூர், கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையங்களில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. இதனால், ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

தள்ளுமுள்ளு: அரியலுார் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், ரயில் நிலையம் முன், இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது; 159 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில், தி.மு.க., - கம்யூ., கட்சியினர் ரயிலை மறித்தும், தண்ட வாளத்தில் சமைத்தும் போராட்டம் நடத்தினர். கும்பகோணம், ஆயக்குடி போன்ற இடங்களில் மறியலில் ஈடுபட்ட, 2,000 பேர் கைது செய்யப்பட்டனர். மைசூரு - திருச்சி ரயிலை மறித்து, த.மா.கா.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில், மறியல் போராட்டம் நடந்தது.

கஞ்சித்தொட்டி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் குத்தாலத்திலும், சீர்காழியில் நடந்த மறியலிலும், தி.மு.க., - ம.தி.மு.க., - கம்யூ., கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி யில், கட்சியினர் தண்டவாளத்தில் படுத்தும், விவசாயிகள், ரயில் பாதையில் கஞ்சித்தொட்டி திறந்தும் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 17 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து: தமிழகத்தில், நேற்று இரண்டாவது நாளாக நடந்த ரயில் மறியல் போராட்டத்தால், கோவை - மன்னார்குடி; சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்; திருச்சி - எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாதியில் ரத்து: வேளாங்கண்ணி - வாஸ்கோட காமா; வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில்கள், தஞ்சை - வேளாங்கண்ணி இடையே ரத்து செய்யப்பட்டன. மன்டுவாடி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...