கோவையில் இரு கல்லூரி மாணவிகள் மாயம் - விசாரணை


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம், பூச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மோனிசா (19). கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் திங்களன்று இரவு நீண்ட நேரமாகியும் விடுதிக்கு வராததால் விடுதிக் காப்பாளர் மோனிசாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கோவை வந்த கிருஷ்ணமூர்த்தி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றோரு சம்பவம்:

கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராஜேஸ்வரி (17) கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு 

சென்ற ராஜேஸ்வரி இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை. 

இதனைத்தொடர்ந்து ஆறுமுகம், கல்லூரி மற்றும் அவரது தோழிகள் வீட்டில் ராஜேஸ்வரியை தேடியுள்ளார். எங்கும் அவர் கிடைக்காத நிலையில், ரத்தினபுரி காவல் நிலையத்தில் செவ்வாயன்று ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...