தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து வழிகள் மாற்றம்


தீபாவளி அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் ஆடைகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போக்குவரத்துத் துறை சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, வருகின்ற அக். 29ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிகளவில் குவிவதால் பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வருகிற 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில்நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரயில்நிலையத்திலிருந்து வரும் பேரூர், ஈஷா யோகா, காருண்யா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாற்றுவழியில் டவுன்ஹால், உக்கடம் காவல் நிலையம் வந்து வலதுபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ரயில்நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் அனைத்தும் டவுன்ஹால், உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க், டி.பி.சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.

பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை ராஜ வீதி, வைசியாள் வீதியில் ஒருபுறமும், சோளக்கடை முக்கில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கிலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பணக்கார வீதியில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...