தொடர்சிகிச்சைக்குப் பின் வனத்திற்குள் சென்ற பெண் யானை

பெரிய தடாகம் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர். 

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...