இந்து பிரமுகர் கொலை வழக்கு: மூவர் மீது குண்டர் சட்டம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தின் போது கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. அப்போது, பேருந்துகள், பொதுமக்களின் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக், பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் துடியலூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். 

இதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை வேலூர் சிறையில் உள்ள கார்த்திக் மற்றும் திருச்சி சிறையில் உள்ள பிரவீன்குமார், பிரதீப்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...