கோவையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - படைவீரர்களுடன் ஆட்சியர் கலந்தாய்வு!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (21.10.2016) வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவது தொடர்பாக அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பேசிகையில்:-  

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு அலுவலர்களை சுழற்ச்சி முறையில் அமர்த்தப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கூட்டங்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதுபோலவே, மழைக் காலங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சிரமங்களையும், அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு ஆகிய குழுக்களும் இணைந்து மீட்பு பணிகளில் செயல்பட வேண்டும் என்றும் மீட்பு பணி நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவசர காலங்களில் மீட்பு பணிக்கென துரித நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, அதிவிரைவுப்படை துணை கமாண்டன்ட் ஜாபர், மத்திய பாதுகாப்பு அதிவிரைவுப்படை கமாண்டன்ட் சஞ்சய்சிங், இரண்டாம் நிலை அலுவலர் ஜி.பி.யுனியன், கடல்காவல்படை கேப்டன் அமுதகுமார், 110 – படைபிரிவு கேப்டன் சந்தீப் ஜாதவ், மாவட்ட கூடுதல் காவல் கண்கானிப்பாளர் முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...