தமிழக அமைச்சரவை கூட்டம்: ஓபிஎஸ் தலைமையில் இன்று மீண்டும் கூடுகிறது


சென்னை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று இரண்டாவது முறையாக கூடுகிறது.

இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையின் அறிவிப்பை தொடர்ந்து,

கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அரசுத் துறைகள் அனைத்தும், நிதி அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அவரே தலைமை வகிப்பார் என ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஏற்கெனவே பிறப்பித்த தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

தற்போது முதல்வர் ஜெயலலிதா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போல் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார், இதையடுத்து, கடந்த 19-ந்தேதி நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மீண்டும் அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெறவிருக்கிறது.

இதில், காவிரி விவகாரம் உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கும் வேளையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டிருப்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...