அதிகரிக்கும் கஞ்சா விற்பனை- இருவர் கைது


கோவையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில், காவல் துறையினரும் பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, புலியகுளம் அடுத்த ரெட் ஃபீல்ட்ஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இராமநாதபுர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்த துணை காவல் ஆய்வாளர் அன்பரசன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாலிபர்கள் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி (27) மற்றும் மனோஜ்குமார் (24) என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...