முகவரி கேட்பது போல் மூன்று பவுன் நகை கொள்ளை


கோவை, கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி வள்ளியம்மை (61). இவர்கள் திங்களன்று வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவர்களிடம் முகவரி ஒன்றைக் காட்டி வழி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தம்பதியினர் வழியினைக் கூறிக்கொண்டிருந்த நிலையில், அந்த நபர்கள் வள்ளியம்மையின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில், கடந்த சில தினங்களாகவே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...