தீபாவளியை சிறப்பான இனிப்புடன் கொண்டாடுவோம்



வரும் தீபாவளியினை முன்னிட்டு அகர்வால்ஸ், செல்லம் கேன்டின் உள்ளிட்ட பல இனிப்புக் கடை நிறுவனங்கள் புதிய வகை இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளனர். 

இதுகுறித்து கோவை டி.பி. சாலையில் செயல்பட்டு வரும் அகர்வால்ஸ் கடையின் உரிமையாளர் உத்கர்ஸ் கூறுகையில், இந்த முறை தீபாவளியை முன்னிட்டு அகர்வால்ஸ் கடையின் சிறப்பான லட்டு, பல வகை இனிப்புகள் அடங்கிய பரிசுப் பெட்டிகள் உள்ளிட்டவை பெரிய அளவில் வெளியூர் மற்றும் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இனிப்புகள், உலர் பழங்கள் போன்றவைகளும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.



இங்கு அதிகமாக இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்வதற்குக் காரணம் நாங்கள் தூய முறையில் செக்கில் ஆட்டிய எண்ணையை மட்டுமே பயன்படுத்துவது ஆகும். இது, ஆரோக்கிமாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுகிறது.

செல்லம் கேன்டின் நிறுவனர் ராமேஷ்வரன் மற்றும் அவரது மகன் ராஜா கூறியதாவது:-

கடந்த 50 வருடமாக இனிப்பு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து வகை கார வகைகளும், இனிப்பு வகைகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், கேசரி, லட்டு, மைசூர்ப்பா, அதிரசம் போன்றவை அதிகளவில் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும், அதிரசம் தான் பெரிய அளவில் விற்பனை செய்யும் பலகாரமாகும. இன்றைய தலைமுறைக்கு அதிரசம் குறித்து தெரிவதில்லை. அதிரசம் மற்றும் தேன்குழல் ஆகியவை கல்யாணம் உள்ளிட்ட சீர் வரிசையில் இடம்பிடிக்கும் இனிப்பு வகைகளாகும்.



தற்போது எண்ணற்ற கடைகள் வந்தாலும் எங்களது செல்லம் கேன்டின் தனி இடம் பிடித்து அமோக விற்பனை நடத்திவருகிறது. இதற்குக் காரணம் எங்களது கடையில் சுகாதாரமான சூரியகாந்தி எண்ணையை மட்டுமே பயன்படுத்துவோம். அதுவும் ஒரு முறை மட்டுமே தான் பயன்படுத்தப்படும். முதல் தர அரிசி, கடலை மாவு உள்ளிட்டவையே எங்களது பலகாரத்தின் அதிக சுவைக்குக் காரணம் என்றனர்.

நொருக்குக் கடையின் விவின்சாலமன் கூறுகையில்:

இந்த வருட தீபாவளிக்கு கருப்பட்டி மைசூர்ப்பா, பீட்ரூட் மைசூர்ப்பா, பேரிட்சை லட்டு உள்ளிட்ட சிறப்பு பலகாரங்களை அறிமுகம் செய்துள்ளோம். இதில், அர்ஜினோமோட்டோ தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பலகாரங்கள் நீண்டநாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க செயற்கையான சில பொருட்களை பயன்படுத்துவது வழக்கம். அதுபோன்றவற்றை தவிர்த்துள்ளோம். செயற்கையான வண்ணங்கள், பாமாயில் உள்ளிட்டவைகள் இதில் கலப்பது இல்லை. காரவகை பலகாரங்களுக்கு நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணை மற்றும் இனிப்பு வகைகளுக்கு நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றார்.



ஸ்னேல்த்தி என்ற இணையதள இனிப்பு விற்பனை அமைப்பு மூன்று நன்பர்களால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள், தங்களது இணையத்திற்கு வரும் ஆர்டர்களுக்கு வீட்டில் சென்றே விநியோகித்து வருகின்றனர். 6 வழிமுறைகளின் கீழ் செயல்படும் இவர்கள் தீபாவளியை முன்னிட்டு புதுபுது வகையில் பல இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.



பாதாம் குக்கிஸ், ஸ்பினச் ராகி குக்கிஸ், ஸ்பைசி மேக்சிகன் சிப்ஸ், கோதுமை மற்றும் ஆப்பிளால் தயாரித்த சிப்ஸ், எல்லு லட்டு உள்ளிட்ட பல இளைய தலைமுறையினர் விரும்பும் இனிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். இது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் நிரைந்ததாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுகிறது.

லிட்டில் திங்க்ஸ் இனிப்பு விற்பனையகம், கோவை சுக்ரவார்பேட்டை அருகே ஒரு வீட்டில் தான் இந்த இனிப்பு தயாரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சாக்லேட் மற்றும் கப் கேக்குகள் மிகவும் பிரசிதிபெற்றதாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இங்கு அதிகளவில் இனிப்புப் பொருட்களை வாங்கிச் செல்கின்றது. இதற்குக் காரணம் நிறுவனத்தின் முத்திரையை அப்படியே அந்த கேக்கில் கொண்டுவருவதுதான்.



இந்த இனிப்பு விற்பனையகத்தில் 7 வகையான கேக்குகள் தயாரிக்கப்படும் நிலையில் வாட்டர் கப் கேக் என்ற கேக்கே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தக் கேக்கை வாயில் வைத்தவுடன் நீரைப் போன்று கரைந்து இனிப்பை வழங்குவதால் தான் இதற்கு வாட்டர் கப் பேக் என பெயர் வைத்ததாக அந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். 

எவ்வித செயற்கையான வண்ணங்களும் கலக்காமல் செய்யப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கையுடன் இந்த கேக்குகளை உண்ணலாம். சைவ முறைப்படி மட்டுமே தயாரிக்கப்படும் இந்த இனிப்புகளை ஆர்டர் செய்ய [email protected] என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தேங்காய் பலகாரங்களுக்கு பிரபலமானது வருனாஸ் ஸ்வீட்ஸ். அதன் நிறுவனர் பி.எஸ்.வெங்கடாச்சலம். இந்தக் கடையில் வாகை மரச் செக்கினால் ஆட்டப்பட்ட எண்ணையை மட்டுமே பயன்படுத்தி தென்னை கருப்பட்டி மைசூர்ப்பா, தென்னங்கருப்பட்டி பாதுசா, பணங்கற்கண்டு லட்டு, பொட்டுக்கல்லை லட்டு, தினை தட்டை வடை உள்ளிட்ட அனைத்து வகை பலகாரங்களும் தயாரிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறையினரின் விருப்பத்தை மையமாகக் கொண்டு இந்த இனிப்பு வகைகளை தயாரிப்பது வருனாஸ் ஸ்வீட் கடையின் சிறப்பாகும். 



ஆன்லைன் இனிப்பு வர்த்தகத்தில் பிரபலமான இனிப்பு விற்பனையில் ஒன்று ஸ்னேக்ஸ் பஜார். அனைத்து வகையான இனிப்பு வகைகளும் இங்கு கிடைக்கும் என்பதால் இவர்களின் இணையத்தை பின்தொடர்வோர் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேங்காய் லட்டு, பேரிச்சை லட்டு, உலர் பழங்கள் பர்பி, காஜூ பிஸ்தா ரோல், குல்கந்து பர்பி போன்றவை ஸ்னேக்ஸ் பஜாரின் சிறப்பாகும்.

இந்த வருட தீபாவளியை பாதுகாப்பான பட்டாசுகள் மட்டுமின்றி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான இனிப்பு வகைகளாலும் கொண்டாடுவோம்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...