ஏர் இண்டியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இண்டியா நிறுவனத்தில் கேபின் குரு பயிற்சி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் விண்ணபதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இண்டியா நிறுவனத்தில் 300 கேபின் குரு பயிற்சி காலிப் பணியிடங்களை நிரப்ப திருமணம் ஆகாத இளம் ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் தெற்கு மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு, பெங்களூர், ஹைதராபாத், கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு உரியவை ஆகும். இதற்கு விண்ணப்பிப்போர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டிகிரி அல்லது டிப்பளமோவில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி மூன்று வருட படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கு வயது மற்றும் உயர வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும். விண்ணப்பதாரர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நன்றாக பேச, எழுத புலமை பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணபதாரர் www.airindia.in என்ற இணையதளத்தில் நவம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்விற்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...