ஐந்து மண்டலங்களிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ‘பொது ஒதுக்கீட்டு இடங்கள்’ (ரிசர்வ் சைட்) கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நகரமைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையியில்:- “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அலுவலருடன் ஆலோசனைகள் செய்து ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கிழக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரத்து 552.20 சதுரமீட்டர் அளவிலுள்ள 293 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மேற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 10 லட்சத்து 29 ஆயிரத்து 952.275 சதுரமீட்டர் அளவிலுள்ள 439 பொது ஒதுக்கீட்டு இடங்களும், வடக்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6 லட்சத்து 3 ஆயிரத்து 645.57 சதுரமீட்டர் அளவிலுள்ள 506 பொது ஒதுக்கீட்டு இடங்களும், தெற்கு மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 6லட்சத்து 60 ஆயிரத்து 812.51 சதுரமீட்டர் அளவிலுள்ள 111 பொது ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய மண்டலத்திலுள்ள 20 வார்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 373.86 சதுரமீட்டர் அளவிலுள்ள 60 பொது ஒதுக்கீட்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அலுவலர்களுடன் ஆலோசனை செய்து துரிதமான முறையில் விரைவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) பற்றி பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏதுவாக கோயம்புத்தூர் மாநகராட்சி இணைய தளமான (www.ccmc.gov.in) என்ற முகவரியில் உள்ள (Reserved site details) என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு  மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...