வாடிக்கையாளர் வருகையை எதிர்பார்க்கும் சிறுகுறு வியாபாரிகள்

இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் படும் மந்தம் என சிறுகுறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காந்திபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. அவர்களில் வியாபாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சிறுகுறு வியாபாரி மீனாட்சி சுந்தரம்:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால வியாபாரம் படும் மந்தமாக உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை இம்மாதம் கடைசி நாட்களில் வருவதால் மாத கடைசியில் பொதுமக்களிடம் பணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இதனால் வியாபாரங்களில் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் உள்ளது. அதே சமயம் தற்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான ஆன்லைன் வர்த்தகங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைவீதிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பொதுமக்களை பல்வேறு இணைப்புகளில் இணைப்பதற்காகக் அனைத்து பொருட்களுக்கும் அதிக அளவில் தள்ளுபடி கொடுத்து வருகின்றனர். பல்வேறு  இதன் மூலம் சிறுகுறு வியாபாரிகளின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



மேலும் இப்பகுதிகளில் அதிநவீன வசதிகளுடன் உயரடுக்குமாடி கட்டிடங்களில் பல்வேறு கடைகள் வருவதால், இங்கு இருக்கும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் பொதுமக்கள் வருவதற்கும் யோசிக்கின்றனர். இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் மிக மோசமாகவும், அதேசமயம் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைகளில் வருவதற்கு நாங்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறோம். இந்த மாத தீபாவளி வியாபாரம் வழக்கமான நாட்களைப் போலவே உள்ளது என்றார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...