சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். வாசலுக்கு மிக அருகாமையில் இருந்த 2 பேர் மட்டும் உடனடியாக வெளியேறிவிட்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18 தொழிலாளர்களைக் காணவில்லை. அவர்கள் சுரங்கத்தில் எந்த பகுதியில் சிக்கியிருக்கிறார்கள் என்று சுரங்க நிபுணர்கள் தேடி வருகிறார்கள். இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் நிலக்கரி உற்பத்தியை நிறுத்தும்படி நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், நிலக்கரி சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 19 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...