வேட்டைக்காரனை விட கொடியவன் கூண்டிலடைப்பவன்.! சிட்டுக்குருவி காப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன் பேட்டி!



கீச்.., கீச்.., என்ற மெல்லிசையை நம் காதுகளின் ஓரம்  கொடுத்துக் கொண்டே இருந்தவை சிட்டு குருவிகள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த காலங்களில் நம் வீட்டு முற்றங்களிலும், ஓடுகளின் இடுக்குகளிலும், மூங்கில் சாரங்களின் துளைகளிலும்  அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தன இந்த குட்டி குருவிகள். இவைகள் அழிந்து போனதற்கு மனிதர்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களே காரணம் என்கிறார், சிட்டுக்குருவி காப்பு அமைப்பின் நிறுவனர் பாண்டியராஜன். காலத்திற்கேற்ப மாறிவிட்ட மனிதர்களை போல் அல்லாமல், இயல்பு நிலை மாறாமல் வாழ்ந்த காரணத்தாலே சிட்டு குருவிகளின் இனம் தற்போது அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதாக கூறுகிறார் இந்த தன்னார்வலர். 



இது குறித்து அவர் கூறியதாவது :- 

சிட்டுக்குருவி காப்பு அமைப்பு கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் என்னோடு சேர்த்து 15 தன்னார்வலர்கள் உள்ளனர். அமைப்பு தொடங்கியது முதல் தற்போது வரை யாரிடமும் நிதி உதவிகள் பெறவில்லை. மாறாக எங்களது வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை இதற்காக செலவிட்டு வருகிறோம். பண்டைய காலம் தொட்டு சிட்டுக்குருவி மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றன. நமது வாழ்வியல் கான்கிரீட் கட்டிடங்களுக்குள்ளும், விரைவு உணவு வகைகளுக்குள்ளும் அடைந்து போன நாள் முதலாய், மனிதர்களோடு ஒன்றி வாழும் பண்புடைய இந்த குருவிகள் காணாமல் போனது எங்கள் அமைப்பினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலமாக தெரியவந்தது. உதரணமாக, முதலில்  ஓட்டு வீடுகளில் நாம் வசித்து வந்தோம். அப்போது சிட்டுக்குருவிகள் ஓடுகளின் இடுக்குகளில் தங்கி வாழ்ந்துவந்தன. அதோடு, சமைப்பதற்காக முதலில் அரிசியை புடைத்து உண்டோம். அதில் இருந்து கிடைக்கும் கழிவுகள், அந்த உயிரினத்துக்கு வாழ்வாதாரமாக அமைந்தது. ஆனால் அதில் எந்த முறையையும் இப்போது நாம் கடைபிடிப்பதில்லை. இதுவே சிட்டு குருவி இனம் அழிந்து போவதுற்கு காரணமாக இருந்த முதல் முக்கிய காரணமாகும்.  போனது எங்கள் அமைப்பினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலமாக தெரியவந்தது. உதாரணமாக, முதலில்  ஓட்டு வீடுகளில் நாம் வசித்து வந்தோம். அப்போது சிட்டுக்குருவிகள் ஓடுகளின் இடுக்குகளில் தங்கி வாழ்ந்துவந்தன. அதோடு, சமைப்பதற்காக முதலில் அரிசியை புடைத்து உண்டோம். அதில் இருந்து கிடைக்கும் கழிவுகள், அந்த உயிரினத்துக்கு வாழ்வாதாரமாக அமைந்தது. ஆனால் அதில் எந்த முறையையும் இப்போது நாம் கடைபிடிப்பதில்லை. இதுவே சிட்டு குருவி இனம் அழிந்து போவதுற்கு காரணமாக இருந்த முதல் முக்கிய காரணமாகும். 

குருவிக்கு கூடு 

சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி வாழும் பழக்கம் இல்லை. சிறு துளைகளுக்குள்ளும், புதர்களிலும் அவை வாழ்ந்து வந்தன. இனப்பெருக்க காலங்களில் அவை, காகங்களின் கூடுகளில் தங்கிக்கொள்ளும். புதர்களும், வீடுகளில் துளைகளும் மறைந்து போனதால், அவற்றிற்கு செயற்கையாக ஒரு கூடு ஒன்றை உருவாக்க முடிவு செய்தோம். அதன்படி, மரப்பெட்டி ஒன்றில் சிறு துளையிட்டு, அதை வீடு, கல்லூரி, வர்த்தக நிறுவனங்களில் வைத்தோம். இதற்கு பலர் ஆதரவளித்ததன் விளைவு, தற்போது அந்த மரப்பெட்டிகள் சிட்டு குருவிகளின் கூடுகளாக மாறியுள்ளது. அந்த கூட்டுக்குள் தேங்காய் நார், சிறு குச்சிகள் போன்றவற்றை சிட்டுகுருவிகளே கொண்டுவந்து இட்டு, தனக்கேற்ற ஒரு சூழலை உருவாக்கி கொள்ளும்.  

காரணம் என்ன? 

ஏன் இந்த சிட்டு குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பலரது மனதில் எழலாம். சிட்டுக்குருவியும் ஒரு உயிரினம் தான். நம்மால் அழிந்தவற்றை மீட்டெடுக்கும் முயற்சியே இது. மேலும், இந்த உலகில் பாலூட்டி இனங்களின் மொத்த எடை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிக எடை கொண்ட உயிரினங்களில், சிறு பூசிகள், எறும்புகள், என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிறு பூச்சிகளின் எடை அதிகரிக்காமல் தடுப்பதில் பறவைகளுக்கு பெரும் பங்குண்டு. கொடி வகை தவரங்களான புடலை, பூசணி, அவரை, சுரை, போன்றவைகளில் உருவாகும் புழுக்களை உண்ணும் பறவைகள், விவசாயிகளின் நண்பனாகவும் திகழ்கின்றன இந்த சிட்டு குருவிகள். இப்படி நமக்கு நன்மை செய்யும் இந்த சிட்டு குருவிகளை காப்பது நமது கடமை. 



ஒரு கூடு தயாரிக்க ரூ.50 செலவாகிறது. இது வரை 400 கூடுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் கோவை மாவட்டதில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்து, கூடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுப்போம். சிட்டுக்குருவிகளை காக்க நினைப்பவார்கள் எங்களது தொலை பேசி எண்ணை (9943850907) தொடர்பு கொண்டு சிட்டுக்குருவிகள் தங்குவதற்காண கூடுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இது போன்ற தன்னார்வலர்களின் முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம், அழிந்து வரும் ஒரு இனத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பாய் பயன்படுத்திக்கொள்ளலாம்!

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...