கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பாலமணி (57). செவ்வாயன்று சமத்தூர் பகுதியில் உள்ள ஜோதிமுத்து தோட்டத்தில் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக பாலமணி சென்றுள்ளார். இவருடன், பாக்கியம் (50), மல்லிகா (45) ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு ஒரு மரத்தில் இலை பறித்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றில் பாலமணி தவறிவிழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற பாக்கியமும், மல்லிகாவும் கிணற்றில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், மூவரும் நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற சிலர் கிணற்றில் இருவரின் உடல் மிதப்பதைக் கண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்துகொண்டிருந்த பாலமணி மற்றும் பாக்கியத்தின் உடலை மீட்டனர். கிணற்றின் அடியில் சிக்கியிருந்த மல்லிகாவில் உடல் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...