ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகனம் நிறுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாலையோரத்தில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதனன்று (இன்று) நடைபெற்றது.



இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் முதற்கட்டமாக ஒத்திகையாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது நடைமுறைக்கு வருகிறது. மாநகராட்சி சார்பாக சாலைக் குறியீடு அமைத்தல், சாலையோரம் இருபுரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். சாலையோர பணிகளில் ஈடுபடும் போது காவல் துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறினார். 

இக்கூட்டத்தில், காவல் உதவி ஆணையர் மகுடபதி, வியாபார நிறுவன உரிமையாளர் அன்னபூரணா சீனிவாசன், ரவிசாம், ஹேமா கண்ணா, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...