லஞ்ச ஒழிப்பு வாரம் அவினாசிலிங்கம் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி


இந்திய அரசாங்கத்தின் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கனரா வங்கி ஆண்டுதோறும் 31-5-2016 முதல் 5-11-2016 வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது. இன்று கனரா வங்கி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2000 மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பேரணி நிறைவு பெற்றவுடன் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக கலையரங்கில் கோவை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.



பின்னர் பேசிய கனரா வங்கி துணை பொதுமேலாளர் பரமசிவம் விழிப்புணர்வு வாரம் பற்றிய அனுசரிப்பு பற்றி அவர் பேசுகையில்; இந்திய முழுவதும் இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டடு வருகிறது. நாடு முழுவதும் உள்ள லஞ்ச ஒழிப்பு முற்றிலும் தடை செய்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாணவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இதில் 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வருங்காலத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்று உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக இந்தப்பேரணி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கல்லூரிகள் மற்றும் 17 பள்ளிகளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு கூறப்படும் என கூறினார். 



இதில், அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார், துணை வேந்தர் பிரேமவதி விஜயன், பல்கலைக்கழக பதிவாளர் வெண்மதி, கனரா வங்கி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...