வால்பாறை குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் சில மாதங்களாக மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலை இன்னும் சீராகாததால் யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், வால்பாறைக்கு உட்பட்ட காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அரிசி மூட்டையை இழுத்து சேதம் செய்ததுடன் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளது. 



அதேப்போல், கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட மேலாளரான தில்லை என்பவரின் வீட்டின் கதவை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தக் காட்டுயானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

மேலும், பன்னிமேடு, வாகமலை, சோலையார், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...