ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (20). ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று காலை, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டியதோடு, சரவணன் வைத்திருந்த 11 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றார்.

சரவணன் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள், வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பதும், இவர் மீது செயின்பறிப்பு, வழிப்பறி உட்பட 9 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிவந்தது. தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிந்த போலீசார், கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...