ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.


கோவையில் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் ஈஷா வித்யா குருகுல பள்ளி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவார பகுதியில் உள்ள ஈஷா வித்யா குருகுல உறைவிட பள்ளி முறையான அனுமதி மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்படும் தேசிய கல்வி மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா வித்யா பள்ளியில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கடந்த ஜீன் மாதம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்த சென்ற போது பள்ளி வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாவும், பள்ளி அங்கீகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு துறை நிறுவனமான குழந்தைகள் நல ஆணையத்தையே ஆய்வு செய்ய விடாமல் தடுத்திட்ட ஈஷா பள்ளி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவிர்த்திருக்க வேண்டுமெனவும், இது சட்டத்தை மதிக்காத ஈஷா நிர்வாகத்திற்கு உதவி செய்வது போல் ஆகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அங்கீகாரமோ, பள்ளி நடத்த அனுமதி பெறாத பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவும், இதர கல்வி நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளி நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் பிரகாச்ஜ் ஜவடேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பி.ஆர்.நடராசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...