குரூப்-4 தேர்வு: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற குரூப்- 4 தேர்வினை ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, ஞாயிறன்று (இன்று) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், 

''குரூப்- 4 தேர்வெழுத கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்து 863 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிறன்று (இன்று) 123 மையங்களில் நடைபெற்ற அத்தேர்வில் 36 ஆயிரத்து 964 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்கானிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்கானிப்பாளர்களும் கண்கானிப்பு பணியினை மேற்கொண்டனர். 

இதில், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வு நடைபெற்றது. மேலும், அனைத்து மையங்களையும் கண்கானிக்க வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...