ரூ.9.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்ட மாநகராட்சி - ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், 

''கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக ஞாயிறன்று (இன்று) வரை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு 6-ல் கவுண்டம்பாளையம், ராமகிருஷ்ணா நகரில் விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 29 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு 51-ல் காந்திபுரம், 100-அடி சாலை, 8-வது தெருவில் சிவா கார்ஸ் என்னும் பழைய நான்கு சக்கர வாகனம் விற்கும் இடமாக உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டன.



இதேபோன்று, கிழக்கு மண்டலம், வார்டு 36-ல் காளப்பட்டி, சிவா நகரில் கோவில் நிளமாக ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.95 லட்சம் மதிப்பிலான 14.5 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு 28-ல் சரவணம்பட்டி, சங்கரா நகரில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 31 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.





இதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு 91-ல் காயத்திரி நகரில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.2 கோடி மதிப்பிலான 42 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்கப்படும்.'' என தெரிவித்தார்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...