குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை- கல்வி பாதிப்பதாக பள்ளி மாணவிகள் மனு

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தி அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் கல்வி பாதிப்பதாகவும், மேலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லி மிரட்டி வருவதாகவும் பள்ளி மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சுகுணா பெப்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் தன்யா, ஜிடி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிவேதா ஆகிய பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிறுப்பதாவது:-

''ஏ.செல்வி, தன்யா, நிவேதா ஆகிய நாங்கள் உப்பிலிபாளையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹரி ராம் வீதியில் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது இந்த வருட படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் எங்களுடைய வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியப்பன் என்பவர் அவருடைய நிலத்தை அரசன் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் அரசகுமாரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைக்கு விட்டார்.

மேற்படி தொழிற்சாலை வந்த பிறகு எங்களது நிம்மதி முற்றிலும் தொலைந்து விட்டது. கால நேரம் இல்லாமல் இரவு நேரங்களிலும் மேற்படி நபர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிற்சாலையில் இருந்து 110 டெசிபலுக்கும் மேலாக ஒலி ஏற்பட்டு எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், இரவு நேரங்களில் உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனது தந்தை பாலசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதால் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணியளவில் தான் வீடு திரும்புவார். வேறு ஆண்கள் யாரும் எங்களது குடும்பத்தில் இல்லாததால் நாங்கள் மேற்படி நபர்களை அணுகி இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களும், அவர்களது உறவினர்களும் எங்களது வீட்டினை காலி செய்துவிடுமாறு மிரட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உனடடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மேற்படி நிறுவனங்களை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...