செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் நம்ம ஊர் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, அமிபேரா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வக்கீல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சென்னையை சேர்ந்தவர். இவரது தாயார் டாக்டர் சியாமளா கோபாலன். புற்றுநோய் நிபுணர் ஆவார். 1960-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார். அவர், குடும்பத்தினர் முதலில் டெல்லியில் வசித்து வந்தனர். ராஜா கிருஷ்ண மூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது, அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு சட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு ஆகியவற்றை படித்துள்ள அவர், தொழில் அதிபராகவும் இருந்து வந்தார். அரசியலில் ஈடுபட்டு இப்போது பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...