சிறந்த தரத்திற்காக டெமிங் விருதுபெற்ற அசோக் லைலான்ட் வாகன உற்பத்தி நிறுவனம்


பந்த்னாகரில்  செயல்படும் அசோக் லைலான்டின் கனரக வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான தரத்தினை போற்றும் வகையில் டெமிங் விருது வழங்கப்பட்டது.



ஜப்பான் நாடு அல்லாமல் டெமிங் விருதினைப் பெரும் வேற்று நாட்டு நிறுவனம் இதுவே முதன்முறையாகும். இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் பந்த்நகர் வாகன உற்பத்தி ஆலைக்கு 2016ம் ஆண்டுக்கான சிறந்த தரத்தின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது டிக்யூஎம் தரக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். கனரக வாகன உற்பத்தியில் இவ்விருது வழங்குவதும் உலக அளவில் இது முதல்முறை என கூறப்படுகிறது.

இவ்விருதை அசோக் லைலேன்ட் நிறுவனத்தின் விநோத் கே தாசரி ஜப்பான் நாட்டில் நடைபெற்ற விழாவில் 

பெற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''அசோக் லைலேன்டைச் சார்ந்த நாங்கள் இவ்விருதினைப் பெருவது பெருமைவாய்ந்த தருணமாகும். ஜப்பான் வெளியே கனக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்த விருது பெரும் நிறுவனமாக அசோக் லைலேன்ட் இருப்பது எங்களது நிறுவனத்திற்கு மகுடம் சூடுவது போல் உள்ளது. எங்கள் பந்த்நகர் உற்பத்தி ஆலை நவீன தொழில்நுட்பத்துடனும், விதிமுறைகளையும் கொண்டுள்ள முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலை  ஆகும். எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்'' என்றார்.

அசோக் லைலேன்டின் மூத்த அதிகாரி ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-

நாங்கள் எங்கள் நிறுவனத்தில் தரத்திற்கும், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தேவைகளைப் பொருத்து வாகனங்களை உற்பத்தி செய்கிறோம். திறமையான ஊழியர்களின் செயல்பாடு, தொழில்நுட்பம்   போன்றவையே  எங்களது தரத்தின் அடிப்படை ஆகும். சிறந்த ஒருங்கிணைப்பே எங்கள் தரத்தினை மேம்படுத்துகிறது'' என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...