இன்றே இந்த ஆஃபர் கடைசி.. பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை கொடுத்து இன்று மட்டும் மின்சார பில் கட்டலாம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சித்துறைகள் உட்பட அரசு அலுவலகங்களில் கட்ட வேண்டிய வரி மற்றும் அபராத கட்டணத்தை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்துவோர் இன்று மட்டும் (அதாவது, நவம்பர் 11ம் தேதி) இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நவம்பர் 9ம் தேதி மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி நாளாக இருந்தவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த கால நீட்டிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...