சுண்டக்கமுத்தூர் குளத்தில் லாரியில் கடத்தப்படும் மண்ணை சிறைபிடித்த பொதுமக்கள்!

சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தின் மண்ணை கவுண்டனுர் பகுதிக்கு தடுப்பனைக்காக எனக் கூறி கடத்தப்படுவதை, அப்பகுதி மக்கள் இன்று லாரியுடன் சிறைபிடித்தனர்.



இது தொடர்பாக அப்பகுதி பாஜக உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறுகையில், பேரூர் வட்டம் சுண்டக்கமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் வடகிழக்கு பருவமழையின் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாகவும், வெள்ளத்தினால் பாதிப்படையும் பகுதிகளை பாதுகாக்கவும், குளத்திற்கு மழைநீர் வரும் வாய்காலினையும் அமைத்தும் உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்து தருமாறும், மேலும்  இக்குளத்தை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளதால், குளத்தை தூர்வாருவதற்கு  கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக  இப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தாசில்தாரை சந்தித்த போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக இக்குளம் சரிசெய்யப்படும் என அவர் கூறினார்.



இதனையடுத்து, அப்பகுதியில் குளம் தூர்வாரப்படாமல் இருந்துவந்தது, மேலும் கவுண்டனூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்காக இக்குளத்தில் இருந்து மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதியளித்தார். இதன் மூலம் தற்போது கடந்த நவம்பர்  5ம் தேதி முதல் இக்குளத்தில் உள்ள மண்ணினை ஒரு தனியார் லாரி சர்வீஸ் மண் எடுத்து வருகின்றனர். தினமும் 10 லாரிகளின் மூலம் மண் அள்ளப்படுவதை, கண்டு அப்பகுதிமக்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கவுண்டனூர் பகுதிக்கு இக்குளத்தில் எடுக்கப்படும் மண் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் இது குறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, லாரி சர்வீஸ் ஒப்பந்தத்தை மீறி மண்ணை வெளியில் விற்று வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு மக்கள் இன்று மதியம் இப்பகுதியில் இருந்து கடத்தப்படும் மண் லாரியை சிறைபிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.



பின்னர், குறித்து தகவலை ஊர் பொதுமக்களின் கையெழுத்தின் மூலம் பேரூர் காவல்நிலையத்திலும், தாசில்தரிடமும் புகார் தெரிவித்தனர். தகவல் அறிந்த தாசில்தார் லாரியினை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...