வங்கி வாசலில் கார் புகுந்து விபத்து.வரிசையில் நின்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயம்.


ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட பத்துப்பேர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சின்னியம் பாளையம் அருகே இந்தியன் வங்கி கிளை செயல்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பணம் எடுக்கவும், மாற்றவும் வங்கிகளில் குவிந்து வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில்  உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பாக ஏராளமானோர் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தனர். இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கார் ஓன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்று கொண்டிருந்த கார் மீதும்  வரிசையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் மீதும் கார் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் அங்கிருந்த பொது மக்கள் பலர் காயம் அடைந்தனர். இதில் நின்று கொண்டு இருந்த காரில் அமர்ந்திருந்த ஸ்ரீஜா என்ற பெண்ணும் அவருடன் இருந்த யாசிகா, அஸ்விகா ஆகிய  இரு குழந்தைகளும் காயம் அடைந்தனர். மேலும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பத்துக்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்தனர். 

வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார் மோதிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுதது காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், அஸ்விகா என்கிற குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் சஞ்சயை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வங்கி வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கார்மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...