ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடையினால், மக்கள் அவதி -ஜி.கே வாசன்

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறையை தளர்த்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார். 

மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...