பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500, 1000 ரூபாயால் செலுத்தலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாளச் சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட வார்டுகளில் ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மேற்கு, வடக்கு, மத்திய மண்டலம், கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களை பாதாள சாக்கடை இணைப்பு பெற மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையினை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், நவம்பர் 17ம் தேதி முதல் மேற்கு மண்டல பகுதிகளுக்கு 12 வது வார்டில் உள்ள சிந்தாமணி நகர் வரிவசூல் மையத்தில் தொகை செலுத்தலாம். தெற்கு மண்டலத்தில் உள்ள பொன்னையராஜாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும் பாதாள சாக்கடை இணைப்பு தொகையை செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், பாதாளச் சாக்கடை பணி முடியும் தருவாயில் உள்ள பழைய மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாதாள சாக்கடைக்கான வைப்புத் தொகையை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இணைப்புகள் பெற்றுக்கொள்ளலாம். பணிகள் முடிவடைந்ததும் இணைப்புகள் வழங்கப்படும். செலுத்தும் வைப்புத் தொகையில் மாறுதல் ஏற்படும் பொழுது அதற்கு ஏற்றவாறு பிறகு தொகையை செலுத்த வேண்டும். மேலும், வைப்புத் தொகையை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் மற்றும் சிறப்பு முகாம்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி இரசீது பெற்றுப் கொள்ளலாம்'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...