தண்ணீரை தேடி வந்த புள்ளி மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தண்ணீரினைத் தேடி வன விலங்குகள் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் பெத்திகுட்டையை அடுத்த ஓதிமலை காரனூரில் செவ்வாயன்று இரவு இரண்டு புள்ளி மான்கள் தண்ணீரை தேடி முத்துசாமி என்பவரது தோட்டத்தினுள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.



பின்னர், காலையில் விவசாய பணிக்காக சென்ற விவசாயி கிணற்றின் உள்ளே மான்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதில் ஒரு புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரோடு இருந்த மற்றொரு மானை மீட்ட வனத்துறையினர் ஓதிமலை காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

வனவிலங்குகள் தண்ணீரினை தேடி கிராம பகுதிகளில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...