கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கும் சாக்கடை நீரால் மக்கள் அவதி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவை துறை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியேறி அப்பகுதியிலேயே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், சாக்கடை நீரை கடந்து செல்ல மரப்பலகையை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்குள்ள கருவூல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கருவூல அலுவலக ஊழியர்களும் செய்வதறியாது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை, சாக்கடை நீர் வெளியேற்றம், வாகன நிறுத்தம் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...