52-வது வார்டுப் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 52-வது வார்டுக்கு உட்பட்ட சக்தி ரோடு, காந்திபுரம், வருமான வரி மற்றும் மத்திய கலால் துறை குடியிருப்பு பகுதியில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி துவக்கி வைத்து பார்வையிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அப்பதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை அவர் ஆய்வு செய்தார்.



பின், மழைநீர் வடிகால் கால்வாயில் சுத்தம் செய்யும் பணிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவதை மாநகராட்சி துணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...