நான்கு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு துவங்கியது


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவ.,19) காலை 7 மணிக்கு துவங்கியது.

தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்; புதுச்சேரியில், நெல்லித்தோப்பு சட்ட சபை தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு மேல், வாக்காளர்கள் நின்றால், அவர்களுக்கு டோக்கன் வழங்கி, ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் 22ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

உடனுக்குடன் அறியலாம்:
ஓட்டுப்பதிவு சதவீதத்தை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிய, புது வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, மொபைல் போனில் அழைத்தால், அவர்கள் ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மொபைல் போனிலேயே பதிவு செய்து அனுப்புவர். அதற்கான, புதிய சாப்ட்வேர், இந்தத் தேர்தலில், அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் அறியலாம். அவை, தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

பலத்த பாதுகாப்பு:

தேர்தல் அமைதியாக நடைபெற, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...