கோவை புகழ் '20 ரூபாய் டாக்டர்' காலமானார்!


கோவை ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ”20 ரூபாய் டாக்டர்” என்றே மக்கள் இவரை அழைப்பார்கள். நேற்று காலை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இவரது கிளினிக்கு மருத்துவம் பார்க்க வந்த ஏழை, எளிய மக்கள் டாக்டர் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக் வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் தனது கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்திய நிலையில், ஏராளமான மக்கள் இவரது கிளினிக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

கோவை மாநகரில் சாதாரண ஆலோசனைக்கு கூட 200 ரூபாய் 300 ரூபாய் என மருத்துவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காவே வாழ்ந்த மருத்துவர் இறந்து போனது கோவை பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...