மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் இடங்கள் மீட்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தை  ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது  என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தகவல்.



மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில்:-
“கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக இன்று (19.11.2016) வரை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு-66, ராமநாதபுரம், பி.ஆர் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான 45 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு-6, கவுண்டம்பாளையம், பூம்புகார் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 83.16 சென்ட் அளவிலான இடங்களும், ஸ்ரீ பூம்புகார் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.3 கோடி மதிப்பிலான 46.35 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம்,  வார்டு-7, கவுண்டம்பாளையம், ஆட்டோ நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 14 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-7, இடையர்பாளையம்,  ஸ்ரீ தேவாங்க  நகரில் சிறுவர் விளையர்ட்டு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 15 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-7, இடையர்பாளையம், தேவாங்க  நகரில் பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10.15 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு-39, பிளமேடு, பாரதி காலனியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு-41, கணபதி, காந்தி மாநகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 4 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-99, குறிச்சி, பி ரூ டி காலனியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 10 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-72, நேரு மைதானம், ஆடிஸ் தெருவில்; ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும், ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.40.3 கோடி மதிப்பிலான 2.70 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.



மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...