வடகிழக்கு பருவ மழை, வரி வசூல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக வருவாய் துறை செயலாளர் கோவையில் ஆய்வு


தமிழக அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஹரிஹரனுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், அரசு வருவாய்த்துறை செயலர் சந்திரமோகன், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள இயற்கை இடர்பாடுகளுக்கான முன்னேற்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், நிலுவையிலுள்ள மனுக்கள், அம்மா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவ மழையினைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், மழையளவு ஆகியன குறித்து கேட்டறிந்தார். 

மேலும், வருவாய் வசூல் சட்டம், நிலவரி, நகர்ப்புற நிலவரி ஆகியவற்றின் கீழ் அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகள் குறித்து ஆய்வு செய்தார். நிலுவைத்தொகைகளை விரைந்து வசூல் செய்யவும் அவர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றிதழ்கள் ஆகிய மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி மற்றும் சின்னச்சாமி மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...