குறைதீர் முகாமில் மக்களின் கோரிக்கை மனுவினை பெற்ற அதிமுக அமைச்சர்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிமடை, பூலுவப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ஞாயிறன்று (இன்று) மக்கள் குறைதீர்  முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்பட துவங்கியுள்ளன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் தனிநபர் வீடுகட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் பயனாளி ஒருவருக்கு ரூ.2.10 லட்சம் மானியம் வீடுகட்ட வழங்கப்பட்டு வருகின்றது. வீடு விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் மானியம் வழங்கப்படுகின்றது.

மேலும், வீட்டுமனைப்பட்டா உள்ளவர்களுக்கு வீடுகட்ட ரூ.6 லட்சம் வங்கி கடன் வழங்கப்படுவதுடன் அதற்கு வட்டியில் 6.50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கப்படுகின்றது. அதேபோல் ஏற்கனவே செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் புதியதாக துவங்கப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்கடன்கள் வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இவற்றினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார். 

இதைத்தொடர்ந்து மத்திபாளையம், சென்னனூர், வடிவேலம்பாளையம், நாதகவுண்டன்பாளையம், சீனிவாசபுரம்  ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் தன்மைக்கேற்ப குறிப்பாக, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை ஆகிய மனுக்கள் உட்பட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...