மருதமலை கோவிலில் எம்.ஏ.சின்னப்பதேவர் உருவப் படத்தை பொறிக்க இந்து மக்கள் கட்சி மனு

மருதமலை முருகன் கோவிலின் மண்டபத்தில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் உருவப் படத்தினை வைக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜூன் சம்பத், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

''பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், புகழ் பெற்ற முருக பக்தருமான சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர், மருதமலை கோவிலுக்கு சரியான பாதை இல்லாத காலத்தில் மலைப்பாதையில் படிக்கட்டுக்களை அமைத்து மருதமலை முருகன் பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்தவர்.

மேலும், மலைப்பாதையில் பல்வேறு பணிகள் செய்து மக்கள் இளைப்பாறும் வகையில் இளைப்பாறும் மண்டபங்களை சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் அமைத்தார்.

இந்த நற்பணிகள் காரணமாக இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது மருதமலை கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் மராமத்துப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதால் எம்.ஏ.சின்னப்ப தேவரின் பெயரும், படமும் மறைக்கப்பட்டு வருகிறது.

எனவே, மருதமலை ஆலயம் மற்றும் மலைப்பாதையில் அவரது பெயர் மற்றும் உருவப்படங்களை மீண்டும் பொறிக்கப்பட வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...