கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி இந்து சமுதாய ஒற்றுமை மையத்தினர் உண்ணாவிரதம்


கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து சமுதாய ஒற்றுமை மையம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் வானதிசீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்வதாகவும், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சம்பவங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து இயக்க பெண்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...