''என்கிட்ட மோதாதே'' அறிமுக இயக்குநர் ராமு செல்லப்பாவுடன் படம் குறித்து நமது உரையாடல்


அறிமுக இயக்குநர் ராமு செல்லப்பா தன் திரைப்படம் குறித்து நமது நிருபரிடம் கூறும்போது, ''இப்படம் வெளியாவது குறித்து ஆவலுடன் இருக்கிறேன். தினமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இப்படம் கமல் மற்றும் ரஜினி ரசிகர்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. 

என்கிட்ட மோதாதே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வருட இறுதிக்குள் திரைக்கு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்றைய காலத்தில் விளம்பர தட்டிகளை விட நவீன தொழில்நுட்பத்தால் உருவான பிளாஸ்டிக் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. இந்த படம் இளம் ரசிகர்களுக்கு காலச்சக்கரத்தின் பின்நோக்கிய பயனமாக இருக்கும். மேலும், 80, 90 காலகட்ட ரஜினி, கமல் ரசிகர்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்.

ராமுசெல்லப்பா நமது சிம்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டி:-

சாதாரண ராமுசெல்லப்பா, இயக்குநர் ராமுசெல்லப்பா ஆன கதை..!

நான் என்னுடைய கல்விக்காலத்தில் ஆட்டோ மேட்டிவ் தொழில்நுட்பம் படித்தேன். ஆனால், எனக்கு அந்த துறையில் வேலை கிடைக்கவில்லை. நான் வேலை தேடி அலைந்துகொண்டிருந்த போதுதான் சினிமா மீதான ஆசை வந்தது. நான் இந்த துறைக்கு வரும் போது எனக்கு யாரையும் தெரியாது.

''என்கிட்ட மோதாதே'' முதல் திரைப்படம் என்பதால் இயக்குநருக்கு சிறப்பு. அதே நேரம் பார்வையாளர்களுக்கு ?

என்கிட்ட மோதாதே 1987-யில் வந்த திரைப்படம். அந்த காலகட்டத்தில் ஒரு பெண் ஒரு ஆணைப் பார்ப்பதே அந்த ஆணுக்கு பெரிய சாதனையாக இருக்கும். தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப வசதி அப்போது இல்லை. அதனால் ஒரு பெண்ணிடம் காதலை சொல்வது கடினமானதும், இனிமையானதுமான செயலாக இருந்தது. என்கிட்ட மோதாதே திரைப்படத்தில் சாதாரண காதல் கதையை படமாக்கியுள்ளேன். 

இதில் ஒரு ஆண், ஒரு பெண்ணின் அருகில் சென்று நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாயா ? என கேட்கிறான். சுற்றிவளைத்து பேசுவது கிடையாது.

இத்திரைப்படம் 80-யில் நடப்பது போல் உள்ளது. இதை மறுஉருவாக்கம் செய்தபோது எந்த பகுதி கடினமாக இருந்தது ?

ஆமாம், இத்திரைப்படம் 80, 90 காலகட்டத்தை நினைவு கூறுகிறது. ஆடைகள், அலங்காரங்கள், கட்அவுட், புகைப்படங்கள், சிறு தெருக்கள், பாவனைகள் அனைத்தையும் நாங்கள் கணக்கில் கொண்டு மறுஉருவாக்கம் செய்துள்ளோம். இவை அனைத்தைக்காட்டிலும் பழைய திரையரங்கை உருவாக்குவதில்தான் எங்களுக்கு கடினம் ஏற்பட்டது.

இது எத்தகைய திரைப்படம் ?

இது கண்டிப்பாக மசாலா படம் அல்ல. இது ஒரு உண்மைக்கு அருகில் எழிய கதை அம்சங்கள் கொண்ட படம். இன்றைய தலைமுறையினரும், இதற்கு முந்தைய தலைமுறையினரும் இப்படத்தை விரும்பி கண்டு ரசிப்பர். முந்தைய தலைமுறை ரசிகர்களுக்கு இது காலத்தின் பின்நோக்கிய இனிமையான படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நட்டி (நடராஜ சுப்பிரமணியம்) இப்படத்தில் ரஜினியின் ரசிகராக வருவார் என எங்களால் யூகிக்க முடிகிறது. இதில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து கூறுங்கள்...

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். ராஜா'ஜி இதில் கமல் ரசிகராக வருகிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி ராஜா'ஜி-யின் சகோதரியாக நடித்துள்ளார். 

ராதாரவியின் திரைவசன உச்சரிப்புகள் ரசிகர்களிடையே தனித்துவமாதாக இருக்கும். விஜய் முருகனின் கதாப்பாத்திரம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். அவரை ஒரு வில்லன் என கூற முடியாது. ஆனால், பொறாமை, ஈகோ மிகுந்த கதாப்பாத்திரமாக இப்படத்தில் வலம் வருகிறார். அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. சூப்பர்ஜி முருகானந்தம், வெற்றிவேல், தாட்சாயினி ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பு வளாகத்தில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள் குறித்து கூறுங்களேன்..!

பல சம்பவங்கள் சு வாரசியமானதாகத் தான் இருந்தது. ஆனால், அதில் சிறப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது தான். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் படிப்பிடிப்புக்கு எங்கள் குழு தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மிகப் பெரிய எம்.ஜி.ஆர் கட்அவுட்டை பேருந்து நிலைய சந்திப்பில் வைத்தோம். அந்த வழியாக சென்ற ஒருவர் இதைக் கண்டதும் கற்பூரம் கொழுத்தி எம்.ஜி.ஆரை வழிபட்டுச் சென்றார். மக்களின் வாழ்க்கையில் எம்.ஜி.ஆரின் தாக்கத்தை கண்டு நாங்கள் வியப்படைந்து விட்டோம்.

எப்போது இப்படம் திரைக்கு வரும் ?

விரைவில், டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரும்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன ?

வரும் ஜனவரி 8ம் தேதி எனது அடுத்த படம் துவங்க உள்ளது. அதற்காக நடிகர், நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை'' என்றார்.

நீண்ட நேர உரையாடலுக்குப் பின் என்கிட்ட மோதாதே படம் சிறந்த வெற்றிப்படமாக அமைய இயக்குநர் ராமுசெல்லப்பாவிடம் வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.

Newsletter

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...