கோவையில் விற்பனையாகும் போலி செல்போன்கள்: உஷார்...!


மூன்றாவது கை என்று கூறும் அளவிற்கு செல்போன்கள் மனிதர் வாழ இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. ஆரம்ப காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்காக பயன்பட்டு வந்த செல்போன்கள் தற்போது ஆண்ராய்ட்டு உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவம் முதல் கேளிக்கை வரை  அனைத்து வசதிகளையும் பெற உதவும் ஒரு பொருளாக மாறிவிட்டது. 

 

பல்வேறு நிறுவனங்களின் செல்போன்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விலை அதிகமான செல்போன்களின் மாதிரிகளைக் கொண்டு அச்சு அசலாய் போலி செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை தற்போது கோவை சந்தைகளை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றது. 

 

கடைகளில் போலி செல்போன்கள் விற்பனை நடப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுவிட்டதால் தற்சமயம் அவற்றை விற்க புதிய யுக்திகளை அதன் தயாரிப்பாளர்கள் கையாண்டு வருகின்றனர். 

 

போலி ரசீது : 

 

போலி செல்போன்களை விற்பனை செய்ய வடமாநில தொழிலாளர்கள் சிலரை விற்பனையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்களிடம் செல்போன் விற்றதற்காக போலியான ரசீது ஒன்று தரப்படுகிறது. சுமார் 2 மாதத்திற்கு முன்பாக வாங்கப்பட்டது போல் அந்த ரசீதில் குறிப்பிடப்படுகிறது. மேலும்,அவற்றை விற்பனை செய்பவர்கள், வடமாநிலத்தில் உள்ள பிரபல கடை ஒன்றில் இந்த செல்போனை வாங்கியதாக தெரிவிக்கின்றனர். பார்ப்பதற்கு, பரம ஏழை போன்று தோற்றமளிக்கும் இவர்கள், அந்த போலி செல்போன்களை தங்களுடையது என்றும், பணப்பற்றாக்குறையால் தற்சமயம் விற்பதாகவும் கூறுகின்றனர்.

 

 

கோவையின் முக்கிய இடங்களில் நடமாடும் இந்த கும்பல் கொடுக்கும் செல்போன்களை குறித்து தெரியாமல் அவற்றை தரமான செல்போன்கள் என்று நினைத்து பலர் ஏமாந்து போகின்றனர். தொடர்ந்து ஆயிரம் ரூபாய் கூட மதிப்பில்லாத அந்த போலி செல்போன்களை ரூ.2 முதல் 3 ஆயிரம் வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறைந்த விலையில் நல்ல செல்போன் வாங்கிவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் நம் ஊர் மக்கள் அது போலி என்று தெரிந்த பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதும் தொடர் கதையாகி வருகிறது.

 

 

 

கண்டுபிடிப்பது எப்படி?

 

போலி செல்போன்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து செல்போன் விற்பனையாளர் பிரசன்னா கூறியதாவது:-

 

தற்போது சந்தைகளில் விற்பனையாகிவரும் போலி செல்போன்களை பொதுமக்கள் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். அந்த அளவிற்கு உணமையானவை போன்றே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

· ஒரு செல்போன் வாங்கும் முன் அதன் தொடுதிரையை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். தரமான செல்போன்களில் தொடுதிரையின் அடர்த்தி மிகவும் குறைவாகவும், லேசாகவும் (எல்.ஈ.டி. திரை) இருக்கும். ஆனால் போலிகளில் இது போன்ற தொடுதிரை இருக்காது.

· நிறுவனத்தின் பெயர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடுதிரையின் மேற்பகுதியில் அல்லது செல்போனின் பின்புறம் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டும் குறைவாக இருக்கும். சாதாரணமாக இதனை பெரும்பாலனோர் கவனிப்பதில்லை.

· போலி செல்போனில் அமைக்கப்பட்டிருக்கும் மென்பொருளானது தரமானதாக இருக்காது. சீன செல்போன்களில் உள்ளது போன்ற ஒரு அமைப்பை காண முடியும். அவ்வாறாக இருப்பின் அது நிச்சயமாக போலி செல்போன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

· போலிகளில் சப்தத்தின் அளவு அதிகமாகவோ அல்லது இயல்புக்கு குறைவாகவோ இருக்கும். மேலும், பாடல்களை ஒலிக்கச்செயும் பொது கரகரப்பான ஒலியை உணரமுடியும்.

இவ்வகையான செல்போன்களை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை கோவையில் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் நம்பகமான செல்போன் விற்பனை நிலையங்களில் அவற்றை வாங்குவது சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 குறைந்த விலைக்கு செல்போன்கள் மட்டுமல்ல வேறு எந்த பொருட்கள் கிடைத்தாலும் அது குறித்து விவரம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று வாங்குவது மிகச்சிறந்தது. அல்லாமல், அவற்றை வாங்கிய பின்னர் உண்மை நிலை தெரிய வரும்போது நஷ்டமும், மன உளைச்சலும் உங்களுக்குத்தான்.

சொல்லுறத சொல்லிட்டோம், உஷார்..!

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...