காவல்துறை மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்து முதலுதவி பயிற்சி


கோவை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் பலியாவோர் எண்ணிகையை தடுக்கவும் போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, இன்று பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தனியார் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. 





கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை ஆணையர், சரவணன்,  வாகனம் ஓட்டும்போதும், விபத்து நடக்கும்போதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மனித உருவ மாதிரிகளை கொண்டு முதலுதவி மேற்கொள்ளும்  வழிமுறைகளை எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அதிகாரி (கிழக்கு) அய்யாசாமி, உதவி கமிஷனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் போது உயிர்களை காப்பாற்றுவோம் என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...